தமிழ் எடுப்பார் கைப்பிள்ளை யின் அர்த்தம்

எடுப்பார் கைப்பிள்ளை

பெயர்ச்சொல்

  • 1

    (மற்றவர்கள் சொல்வதையெல்லாம் சரி என்று நம்பிச் செயல்படும்) சுயசிந்தனை அற்ற ஒருவர்; எளிதாக வசப்படுத்தக்கூடிய நபர்.

    ‘பொதுமக்கள் அரசியல்வாதிகளின் எடுப்பார் கைப்பிள்ளைகளாக இருந்த காலம் போய்விட்டது’
    ‘தன் மகன் எடுப்பார் கைப்பிள்ளையாக இருப்பதை நினைத்து அவளுக்கு வருத்தமாக இருந்தது’