தமிழ் எடுபிடி யின் அர்த்தம்

எடுபிடி

பெயர்ச்சொல்

 • 1

  சிறுவேலை.

  ‘எடுபிடி வேலை செய்வதற்குத்தான் ஆளே கிடைப்பதில்லை’
  ‘ஏதோ நல்ல வேலை என்று வந்தேன். பார்த்தால் எடுபிடி வேலைதான்’

 • 2

  எடுபிடி வேலை செய்பவர்.

  ‘இவரும் இவர் பையனும் பண்ணையார் வீட்டில் எடுபிடிகள்’
  ‘எடுபிடிகளாக வேலைக்குச் சேர்ந்தவர்கள் கொத்தனாராக ஆகிவிட்டார்கள்’

 • 3

  பணம், அந்தஸ்து, அதிகாரம் முதலியவற்றில் உயர்ந்த நிலையில் இருப்பவர்களுக்குச் சார்பாக செயல்படுபவர்.

  ‘பணக்காரர்களின் எடுபிடிகளாக இருந்துவரும் இவர்களா ஏழைகளுக்கு நல்லது செய்யப்போகிறார்கள்?’