தமிழ் எடை யின் அர்த்தம்

எடை

பெயர்ச்சொல்

 • 1

  (ஒருவரை அல்லது ஒன்றை) நிறுத்துக் கணக்கிடும்போது பெறும் அளவு.

  ‘உயரத்துக்குத் தகுந்த எடை இல்லையே உனக்கு’
  ‘சுவாமிகளின் எடைக்கு எடை தங்கம்’
  ‘தொடர்ந்து எடை குறைந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்’
  ‘இந்த இயந்திரத்தின் எடை 200 கிலோ ஆகும்’

 • 2

  (விறகு, கரி முதலியவற்றை நிறுக்கும்போது) தராசின் தட்டு கொள்ளும் அளவுக்கு வைத்து அதை ஓர் அளவாகக் கணக்கிடும் (முன்பு வழக்கில் இருந்த) முறை.

  ‘ஆறு எடை விறகு கொடுங்கள்!’
  ‘வண்டியில் இருபது எடை சவுக்குக் கட்டை’

 • 3

  காண்க: எடைக்கல்