தமிழ் எடைபோடு யின் அர்த்தம்

எடைபோடு

வினைச்சொல்-போட, -போட்டு

 • 1

  எடையைக் கணக்கிடுதல்.

  ‘சரக்குகள் இங்கு எடைபோடப்படும்’

 • 2

  (மனிதர்களை) மதிப்பிடுதல்; அளவிடுதல்.

  ‘பார்த்த மாத்திரத்தில் மனிதர்களை அவர் எடைபோட்டுவிடுவார்’
  ‘அவர் தன்னோடு பேசிக்கொண்டு இருந்தவனை நிதானமாக எடைபோட்டார்’