தமிழ் எண் யின் அர்த்தம்

எண்

பெயர்ச்சொல்

 • 1

  (எத்தனை என்பதை) கணக்கிட்டுச் சொல்வதற்கு உதவும் 1, 2, 3 போன்ற கணிதக் குறியீடு.

  ‘பக்க எண் 21’

 • 2

  ஒரு தொகுப்பில் இருக்கும் தனித்தனி அலகுகளின் அடையாளமான இலக்கம்.

  ‘என்னுடைய தொலைபேசி எண்: 24412993’

 • 3

  (நெசவில்) ஒரு பவுண்டு எடையில் எத்தனை சிட்டம் இருக்குமோ அந்த எண்ணிக்கையை அந்தப் பருத்தி நூல் பருமனின் அளவாகக் குறிப்பிட வழங்குவது.

தமிழ் எண் யின் அர்த்தம்

எண்

பெயரடை

 • 1

  ‘எட்டு’ என்பதன் பெயரடை வடிவம்.

  ‘எண்திசை’