தமிழ் எண்ணிக்கை யின் அர்த்தம்

எண்ணிக்கை

பெயர்ச்சொல்

 • 1

  எத்தனை அல்லது எவ்வளவு என்னும் கணக்கு; மொத்தத் தொகை.

  ‘இந்த அரண்மனையில் உள்ள அறைகளின் எண்ணிக்கை நூறு’
  ‘அக்கால நாடகங்களில் பாடல்களின் எண்ணிக்கை மிகுதி’
  ‘விந்தில் உள்ள உயிரணுக்களின் எண்ணிக்கையைத் தெரிந்துகொள்ள மருத்துவப் பரிசோதனைகள் உண்டு’

 • 2

  கணக்கிடும் அல்லது அளவிடும் செயல்.

  ‘எண்ணிக்கை தவறிவிட்டதால் மறுபடியும் முதலிலிருந்து அரிசியை அளக்க ஆரம்பித்தேன்’
  ‘ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும்’