தமிழ் எண்ணு யின் அர்த்தம்

எண்ணு

வினைச்சொல்எண்ண, எண்ணி

 • 1

  (வரிசையாக அல்லது முறைப்படி) எண்களைக் கூறுதல்.

  ‘நூறுவரை எண்ணிவிட்ட சிறுமிக்கு என்ன பெருமை!’

 • 2

  (எத்தனை இருக்கின்றன என்று) கணக்கிடுதல்.

  ‘திருப்பதி உண்டியல் பணத்தை எண்ணுவதற்கு எத்தனை பேர் வேண்டும்?’
  ‘வானத்தில் உள்ள நட்சத்திரங்களை எண்ண முடியுமா?’

தமிழ் எண்ணு யின் அர்த்தம்

எண்ணு

வினைச்சொல்எண்ண, எண்ணி

 • 1

  (நடந்த ஒன்றை) நினைத்தல்; சிந்தித்தல்.

  ‘தாய் காட்டிய அன்பையும் பாசத்தையும் எண்ணுகிறபோது மனம் உருகிவிடுகிறது’
  ‘நடந்ததை எண்ணிப்பார்க்காமல் இருக்க முடியவில்லை’

 • 2

  ஆலோசித்தல்; திட்டமிடுதல்.

  ‘மகளை மருத்துவக் கல்லூரியில் சேர்க்க எண்ணியிருக்கிறோம்’
  ‘தற்போது வீடு வாங்க வேண்டாம் என்று எண்ணுகிறார்’

 • 3

  கருதுதல்; மதித்தல்.

  ‘கலையை வியாபாரப் பொருளாக எண்ணுவது எவ்வளவு இழிவானது!’
  ‘அவருடைய பாராட்டை மிகப் பெரிய கௌரவமாக எண்ணுகிறேன்’