தமிழ் எண்ணம் யின் அர்த்தம்

எண்ணம்

பெயர்ச்சொல்

 • 1

  நினைப்பு; சிந்தனை.

  ‘பல்வேறு எண்ணங்களால் அவன் குழம்பினான்’

 • 2

  ஆலோசனை; திட்டம்.

  ‘மகளை மருத்துவக் கல்லூரியில் சேர்க்கும் எண்ணம் என்னவாயிற்று?’

 • 3

  கருத்து; மதிப்பு.

  ‘அவரைப் பற்றி எனக்குள்ள உயர்வான எண்ணம் என்றும் மாறாது’