தமிழ் எத்தனை யின் அர்த்தம்

எத்தனை

பெயர்ச்சொல்

 • 1

  (எண்ணப்படக்கூடியதில், அளவிடப்படக்கூடியதில்) எவ்வளவு.

  ‘இந்தத் தோப்பில் எத்தனை மரங்கள் இருக்கின்றன?’
  ‘அணையின் நீர்மட்டம் எத்தனை அடி உயர்ந்திருக்கிறது?’

 • 2

  எண்ணிக்கை, தன்மை ஆகியவற்றைக் குறித்து வரும்போது வியப்பை வெளிப்படுத்தும் சொல்.

  ‘பறவைகள் எத்தனை விதம்!’
  ‘இன்பமாகக் கழித்த நாட்கள்தான் எத்தனை!’
  ‘தோட்டம் எத்தனை அழகாக இருக்கிறது!’