தமிழ் எதிர்காலம் யின் அர்த்தம்

எதிர்காலம்

பெயர்ச்சொல்

 • 1

  (நிகழ்காலத்தைத் தொடர்ந்து) வரும் காலம்.

  ‘இன்று என்பது நிகழ்காலம்; நாளை என்பது எதிர்காலம்’

 • 2

  (நிகழ்காலத்தைக் கடந்து) வளர்ச்சி, நன்மை போன்றவை ஏற்படப்போகும் காலம்.

  ‘கைத்தறிக்கு எதிர்காலமே கிடையாது என்று கூறியவர்களும் உண்டு’

 • 3

  இலக்கணம்
  வரும் காலத்தைக் குறிப்பது.

  ‘‘ஓடுவான்’ என்ற வினைமுற்றில் ‘வ்’ எதிர்கால இடைநிலை’