தமிழ் எதிர்கொள் யின் அர்த்தம்

எதிர்கொள்

வினைச்சொல்-கொள்ள, -கொண்டு

 • 1

  (வருபவரை நோக்கி) சென்று சந்தித்தல்.

  ‘சம்பந்தியை எதிர்கொண்டு அழைக்க வாசலில் காத்திருந்தார்’

 • 2

  நேருக்கு நேர் சந்தித்தல்.

  ‘எப்படி அவரை எதிர்கொள்ளப்போகிறோம் என்று அவன் தவித்தான்’
  ‘உலகம் எதிர்கொள்ளும் பிரச்சினை மக்கள்தொகைப் பெருக்கமாகும்’

 • 3

  (போட்டிகளில் ஒரு அணி மற்றொரு அணியை அல்லது கிரிக்கெட்டில் பந்துவீச்சை) எதிர்த்து விளையாடுதல்.

  ‘சானியா மிர்சா நாளைய போட்டியில் வீனஸ் வில்லியம்ஸை எதிர்கொள்கிறார்’
  ‘உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் பிரேசில் அணி ஜெர்மனியை எதிர்கொண்டது’
  ‘வீரேந்திர சேவாக் 182 பந்துகளை எதிர்கொண்டு 200 ஓட்டங்களை எடுத்தார்’