தமிழ் எதிர்துருவம் யின் அர்த்தம்

எதிர்துருவம்

பெயர்ச்சொல்

  • 1

    (இருவர் அல்லது இரண்டு அமைப்புகள் போன்றவை) நேரெதிர்த் தன்மை கொண்டிருப்பதால் ஒத்துப்போகாத நிலை.

    ‘எப்போதுமே வீட்டில் அப்பாவும் அண்ணனும் எதிர்துருவங்கள்தான்’
    ‘எதிர்துருவமாக இருக்கும் இந்த இரண்டு கட்சிகளும் தேர்தலில் எப்படிக் கூட்டணி அமைத்துக்கொண்டன என்பதுதான் ஆச்சரியமான விஷயம்’