தமிழ் எதிர்ப்படு யின் அர்த்தம்

எதிர்ப்படு

வினைச்சொல்-பட, -பட்டு

 • 1

  (தற்செயலாக) எதிரில் வருதல்; (வழியில்) காணும்படி நேரிடுதல்; தென்படுதல்.

  ‘தெருவில் எதிர்ப்பட்ட ஒவ்வொருவரிடமும் காணாமல் போன நாயைப் பற்றிக் கேட்க ஆரம்பித்துவிட்டான்’
  ‘கோயிலுக்குப் போகும் வழியில் பழைய நண்பர் ஒருவர் எதிர்ப்பட்டார்’
  ‘கப்பல் பயணத்தின்போது பனிப் பாறைகள் எதிர்ப்பட்டால் மிகவும் எச்சரிக்கை தேவை’
  ‘பேசிக்கொண்டே வரும்போது வெற்றிலை பாக்குக் கடை ஒன்று எதிர்ப்பட்டது’
  ‘வழியில் எத்தனையோ மான்களும் காட்டுப் பூனைகளும் எதிர்ப்பட்டன’
  ‘இடையிடையே எதிர்ப்பட்ட தூண்களில் மோதிவிடாமல், இருட்டில் கைகளால் துழாவியபடி நிதானமாக நடந்தான்’

 • 2

  (ஒரு செயலில் ஈடுபட்டிருக்கும்போது ஒன்றை) சந்தித்தல்; எதிர்கொள்ளுதல்.

  ‘வீடு கட்டும்போது எதிர்ப்பட்ட பிரச்சினைகள் பல’