தமிழ் எதிர்ப்பு யின் அர்த்தம்

எதிர்ப்பு

பெயர்ச்சொல்

 • 1

  ஏற்கவோ ஒத்துப்போகவோ முடியாத ஒன்றிற்கு ஒருவர் தெரிவிக்கும் கண்டனம் அல்லது அது குறித்து மேற்கொள்ளும் எதிரான போக்கு.

  ‘தன்னுடன் பணிபுரியும் பெண்ணை மணந்துகொள்ள வீட்டில் அவனுக்குக் கடும் எதிர்ப்பு’
  ‘தமிழகத்தில் மதுவிலக்கை நீக்குவதற்கு எதிர்ப்பு இருந்ததா?’
  ‘சிறு வியாபாரிகள் காட்டிய எதிர்ப்பால் புதிய வரி விதிப்பு கைவிடப்பட்டது’
  ‘உங்கள் எழுத்துக்கு எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது’