தமிழ் எதிர்பார் யின் அர்த்தம்

எதிர்பார்

வினைச்சொல்-பார்க்க, -பார்த்து

 • 1

  (ஒன்று நிகழும் அல்லது நிகழ வேண்டும் என்று) முன்கூட்டியே நினைத்தல்.

  ‘அவரிடமிருந்து கடிதம் வரும் என்று எதிர்பார்க்கிறேன்’
  ‘அவள் வேலைபார்ப்பதை விட்டுவிட வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கக்கூடாது’
  ‘பலனை எதிர்பார்த்து நான் இந்தக் காரியத்தைச் செய்யவில்லை’

 • 2

  பெறுவதற்கு (விரும்பி) காத்திருத்தல்.

  ‘கூடிய விரைவில் உன் திருமண அழைப்பிதழை எதிர்பார்க்கிறேன்’

 • 3

  (உதவிக்கு ஒருவரை) எதிர்நோக்குதல்.

  ‘அவருடைய தயவை எதிர்பார்க்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டது’
  ‘அவர் யாரையும் எதிர்பார்க்காமல் காரியங்களைத் தானே செய்துகொள்வார்’