தமிழ் எதிர்மாறு யின் அர்த்தம்

எதிர்மாறு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  உடன்படாத நிலை; முரண்பாடு.

  ‘நீ என் கொள்கைக்கு எதிர்மாறான கருத்தைச் சொல்கிறாய்’
  ‘கட்சி விதிகளுக்கு எதிர்மாறாக நடந்துகொள்பவர்கள் கட்சியை விட்டு நீக்கப்படுவார்கள்’

 • 2

  ஒன்றின் தன்மைக்கு முற்றிலும் வேறுபட்டு இருக்கும் தன்மை.

  ‘கூட்டலுக்கு எதிர்மாறான செயல் கழித்தல்’
  ‘இதுவரை கையாண்ட பாணியிலிருந்து முற்றிலும் எதிர்மாறான பாணியை இயக்குநர் இந்தப் படத்தில் கையாண்டிருக்கிறார்’
  ‘திரவமானது வாயுவாக மாறும் நிகழ்வை ஆவியாதல் என்கிறோம். இதற்கு எதிர்மாறாக, அதாவது, வாயு திரவமாக மாறுவதைக் குளிர்தல் என்று அழைக்கிறோம்’