தமிழ் எதிர்வினை யின் அர்த்தம்
எதிர்வினை
பெயர்ச்சொல்
பெருகிவரும் வழக்கு- 1
பெருகிவரும் வழக்கு (ஒருவருடைய கருத்து, பேச்சு போன்றவற்றுக்கு) மற்றவர் தெரிவிக்கும் மறுப்பு; எதிர்ப்பு.
‘சென்ற இதழில் பிரசுரமான கட்டுரைக்கு ஏராளமான எதிர்வினைகள் வந்துள்ளன’‘எதிர்கட்சித் தலைவரின் அறிக்கைக்கு எதிர்வினையாக அமைந்திருந்தது அமைச்சரின் இந்தப் பேட்டி’ - 2
பெருகிவரும் வழக்கு (ஒரு செயலுக்கான) ஒருவரின் அல்லது ஒன்றின் எதிர்ச்செயல்.
‘அவரைக் கைது செய்ததன் எதிர்வினை இவ்வளவு கடுமையாக இருக்கும் என்று அரசு எதிர்பார்த்திருக்காது’‘மாணவர்களின் எதிர்வினை மோசமாக இருக்கும் என்று அஞ்சியே கல்லூரியை ஒரு மாதம் மூடி விட்டார்கள்’