தமிழ் எதிரி யின் அர்த்தம்

எதிரி

பெயர்ச்சொல்

 • 1

  ஒருவரிடம் பகைமை கொண்டிருப்பவர்; விரோதி.

  ‘தேர்தலில் அவரை எதிர்த்துப் போட்டியிட்டதிலிருந்து எதிரியாகிவிட்டேன்’
  ‘பரம்பரை எதிரிகளைப் பற்றிய இன்னொரு படம் இது’

 • 2

  ஒருவருக்கு எதிராகப் போட்டியாக இருப்பவர்.

  ‘அவர் என் அரசியல் எதிரி என்றாலும் எங்களிடையே பகைமை இல்லை’

 • 3

  (ஒரு வழக்கில்) குற்றம் சாட்டப்பட்ட நபர்.

  ‘இந்த வழக்கில் எதிரி தலைமறைவாகிவிட்டார்’
  ‘இந்த வழக்கில் முக்கியமான எதிரிகளைக் காவல்துறையினர் தேடிவருகின்றனர்’