தமிழ் எதிரிடை யின் அர்த்தம்

எதிரிடை

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (கொள்கை, இயக்கம் முதலியவற்றுக்கு) நேர்மாறு; முரண்.

    ‘எங்கள் கொள்கைக்கு இந்த இயக்கம் எதிரிடையானது’
    ‘யதார்த்தவாதம் என்பது கற்பனாவாதத்திற்கு எதிரிடையானது’
    ‘பிறமொழிச் சொற்களை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும், எல்லாவற்றையும் தனித் தமிழ் ஆக்கிவிட வேண்டும் எனவும் நேர் எதிரிடையான இரண்டு கருத்துகள் நிலவுகின்றன’