தமிழ் எதிரில் யின் அர்த்தம்

எதிரில்

வினையடை

 • 1

  எதிர்ப்பக்கத்தில்; முன்னே.

  ‘உன் வீட்டுக்கு எதிரில் ஒரு கல்லூரி இருக்கிறது அல்லவா?’
  ‘எனக்கு எதிரில் ஒரு இளம் பெண் உட்கார்ந்திருந்தாள்’

 • 2

  (ஒருவர்) பார்க்க.

  ‘என் எதிரிலேயே அவன் என் தம்பியை அடித்துவிட்டான்’
  ‘இந்த விபத்து என் கண் எதிரில் நடந்தது’

 • 3

  (செல்லும் திசைக்கு) எதிர்த்த திசையில்.

  ‘நான் யாரைத் தேடிக்கொண்டு புறப்பட்டேனோ அவர் எதிரில் வந்துகொண்டிருந்தார்’