தமிழ் எதிர்மறை யின் அர்த்தம்

எதிர்மறை

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  நேர்மாறானது.

  ‘கூட்டலின் எதிர்மறை கழித்தல்’
  ‘இவ்விரண்டு ஓவியங்களும் பாணியில் ஒன்றாக இருந்தாலும், எதிர்மறையான உணர்ச்சிகளைச் சித்தரிக்கின்றன’

 • 2

  சாதகமாக அமையாதது; பாதகமானது.

  ‘நீ அவனைத் திட்டுவதால் பயன் எதுவும் இல்லை. அதனால் எதிர்மறையான விளைவுகள் கூட ஏற்படலாம்’
  ‘அவரிடமிருந்து ‘இல்லை’ என்று எதிர்மறையில் பதில் கிடைத்தது’

 • 3

  இலக்கணம்
  உடன்பாட்டை மறுப்பது.

  ‘‘அவன் வரவில்லை’ என்பது எதிர்மறை வாக்கியம்’