தமிழ் எந்த யின் அர்த்தம்

எந்த

பெயரடை

 • 1

  வினாவாகப் பயன்படுத்தும் சுட்டுப் பெயரடை; எப்படியான.

  ‘எந்த வீட்டில் குடியிருக்கிறாய்?’
  ‘எந்தப் பையன் முதலில் வந்தான்?’

 • 2

  எப்படிப்பட்ட.

  ‘அவர் உனக்கு எந்த விதத்தில் உறவு?’
  ‘எந்த வீடாக இருந்தால் என்ன?’

 • 3

  இருக்கும் பலவற்றில் ஒன்று.

  ‘எந்த வேலையாக இருந்தாலும் சரிதான்’
  ‘எந்த நாளும் நல்ல நாள்தான்’