தமிழ் எந்த முகத்தோடு யின் அர்த்தம்

எந்த முகத்தோடு

வினையடை

  • 1

    (ஒருவரிடம் தான் முன்பு நடந்துகொண்ட விதம் சரியில்லை என்பதால் தற்போது) எந்தக் காரணத்தைக் காட்டி.

    ‘போனமுறை வந்தபோது அவரிடம் சண்டை போட்டுவிட்டேன். இப்போது எந்த முகத்தோடு நான் அவரைப் பார்ப்பது?’
    ‘வாங்கிய பணத்தையே திருப்பித் தராதபோது எந்த முகத்தோடு அவரிடம் போய் மறுபடியும் கடன் கேட்பாய்?’