தமிழ் என்று யின் அர்த்தம்

என்று

பெயர்ச்சொல்

 • 1

  எந்த நாள்.

  ‘என்று உன் பிறந்த நாள்?’

தமிழ் என்று யின் அர்த்தம்

என்று

வினையடை

 • 1

  எந்த நாளில்.

  ‘நீ என்று வந்தாயோ அன்றுதான் நானும் வந்தேன்’
  ‘குடும்பத் தொல்லைகள் என்று தீரும்?’

தமிழ் என்று யின் அர்த்தம்

என்று

இடைச்சொல்

 • 1

  ஒருவரால் தெரிவிக்கப்பட்டது, கேட்கப்பட்டது, நினைக்கப்பட்டது, குறிப்பிடப்பட்டது முதலியவற்றைத் தொடர்ந்து வரும் வாக்கியத்தோடு தொடர்புபடுத்தும் இடைச்சொல்.

  ‘‘முருகேசன் வீட்டுக்கு எப்படிப் போவது?’ என்று அவர் கேட்டார்’
  ‘எப்படி ஊருக்குப் போய்ச் சேர்வது என்று அவன் யோசித்தான்’
  ‘அவன் இப்படிச் செய்வான் என்று நான் நினைக்கவில்லை’

 • 2

  ஒரு தொடரில் ஒன்றுக்கு மேற்பட்ட வினையெச்சங்கள் வரும்போது கடைசி வினையெச்சத்துடன் இணைந்து அவற்றைப் பின்வரும் வாக்கியத்துடன் தொடர்புபடுத்தும் இடைச்சொல்.

  ‘கடையில் பெட்டிகள் வைக்க, பாட்டில்களை அடுக்க என்று அந்த இடம் பயன்பட்டது’
  ‘வங்கிக்குப் போக, சாப்பாடு வாங்க, சில்லறை வேலைகள் செய்ய என்று ஒரு பையன் வேலைக்குத் தேவை’

 • 3

  ஒலிக்குறிப்புச் சொற்களை வினையடையாக்கப் பயன்படும் இடைச் சொல்.

  ‘‘களுக்’ என்று சிரித்தாள்’
  ‘‘படக்’ என்று கிளை முறிந்தது’
  ‘அடிபட்ட இடம் விண்விண்ணென்று வலித்தது’

 • 4

  (நான்காம் வேற்றுமை ஏற்ற பெயர்ச்சொல்லுக்குப் பின் வரும்போது) ஒருவருக்கோ ஒன்றுக்கோ உரியது என்பதைத் தெரிவிக்கும் இடைச்சொல்.

  ‘நமக்கு என்று ஒரு வீடு வேண்டும்’
  ‘உங்களுக்கு என்று ஒரு கொள்கை கிடையாதா?’
  ‘வெங்காய சாம்பாருக்கு என்று ஒரு மணம் உண்டு’

 • 5

  ஒரு கூற்று தனித்துக் குறிப்பிடப்படும் ஒன்றுக்கு அல்லது ஒருவருக்கு மட்டுமல்லாமல் தொடர்ந்து குறிப்பிடப்படும் மற்றவற்றுக்கும் அல்லது மற்றவர்களுக்கும் பொருந்தும் என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்.

  ‘மாமா என்று மட்டும் இல்லை, எல்லோரும் என்னை ஒதுக்குகிறார்கள்’
  ‘சாப்பாட்டுக்கு என்று இல்லை, எல்லாவற்றுக்குமே நான் கஷ்டப்படுகிறேன்’
  ‘கடும் உழைப்பு வியாபாரத்திற்கு என்று இல்லை, படிப்பிற்கும் வேண்டியதுதான்’
  ‘நான் சொல்வது உனக்கு என்று இல்லை, உன் எதிரிக்கும் பொருந்தும்’

 • 6

  ஒரு தகவலையும் அந்தத் தகவல் குறிப்பிடும் நபரை அல்லது பொருளையும் இணைக்கப் பயன்படுத்தப்படும் இடைச்சொல்.

  ‘காந்தி என்று ஒரு மாமனிதர் இந்தியாவில் இருந்தார்’
  ‘மணி என்று ஒரு வேலைக்காரன் எங்கள் வீட்டில் இருந்தான்’
  ‘வேலை என்று ஒன்று கிடைக்க இன்னும் ஆறு, ஏழு மாதங்கள் ஆகும்’
  ‘அந்த வீடுகளுக்கு வாசல் என்று ஒன்று உண்டா என்ற கேள்வி எழுந்தது’
  ‘படம் முழுவதும் ‘காதல், காதல்’ என்று ஒரே பேத்தல்’