தமிழ் எரிச்சல் யின் அர்த்தம்

எரிச்சல்

பெயர்ச்சொல்

 • 1

  (பொறுத்துக்கொள்ள முடியாத நிலையில் ஏற்படும்) கோப உணர்வு.

  ‘தன்னைக் கேட்காமலே அவன் பணத்தைக் கொடுத்தது அவருக்கு எரிச்சலூட்டியது’
  ‘அவர்கள் வீட்டுக் கல்யாணத்திற்கு உன்னைக் கூப்பிடவில்லை என்பதைத் திரும்பத்திரும்ப சொல்லி எரிச்சல் உண்டாக்காதே!’

 • 2

  (கண், நெஞ்சு முதலியவற்றில் ஏற்படும்) எரிப்பு அல்லது கரிப்பு உணர்ச்சி.

  ‘இரவெல்லாம் விழித்திருந்ததால் கண்ணில் எரிச்சல்’

 • 3

  (தீ சுட்ட இடத் தில்) எரிவது போன்ற உணர்ச்சி.

 • 4

  பொறாமை.

  ‘பிறர் வெற்றி பெற்றால் சிலர் எரிச்சல் அடைகிறார்கள்’