தமிழ் எரு யின் அர்த்தம்

எரு

பெயர்ச்சொல்

  • 1

    (பயிர்களுக்கு ஊட்டச்சத்து அளிக்கும்) சாணம், மக்கிய தாவரக் கழிவு போன்ற இயற்கை உரம்.

    ‘ரசாயன உரங்கள் வந்த பிறகு நிலத்துக்கு எரு போடுவது குறைந்து விட்டது’

  • 2

    வட்டார வழக்கு வறட்டி.

    ‘எரு விற்றுக் கிடைத்த காசு’