எறி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

எறி1எறி2

எறி1

வினைச்சொல்எறிய, எறிந்து

 • 1

  (தூரத்தில் போய் விழும்படி) வேகத்துடன் வீசுதல்.

  ‘வாழைப்பழத் தோலை நடைபாதையில் எறியாதே!’
  ‘ஈட்டி எறியும் போட்டியில் முதல் பரிசு’

எறி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

எறி1எறி2

எறி2

துணை வினைஎறிய, எறிந்து

 • 1

  முதன்மை வினையின் செயல் ஒரு வேகத்துடனும் தீவிரத்துடனும் நிகழ்த்தப்படுவது என்பதைக் குறிப்பிடும் துணை வினை.

  ‘காற்று கூரையைப் பிய்த்தெறிந்தது’
  ‘என் நம்பிக்கைகளைத் தகர்த்தெறிந்தான்’
  ‘கவலைகளையெல்லாம் துடைத்தெறி!’