தமிழ் எல்லைக்கோடு யின் அர்த்தம்

எல்லைக்கோடு

பெயர்ச்சொல்

 • 1

  எல்லையாக அமைந்து இரண்டு நாடுகள், மாநிலங்கள் அல்லது மாவட்டங்கள் போன்றவற்றைப் பிரித்துக் காட்டும் கோடு.

  ‘சர்வதேச எல்லைக்கோடு’
  ‘1913-14ஆம் ஆண்டு ஹென்றி மக்மாகன் வடகிழக்கில் இந்தியாவிற்கும் திபெத்திற்கும் இடையே ஒரு எல்லைக்கோட்டை நிர்ணயித்தார்’
  ‘புதிதாக அமைக்கப்பட்ட மாவட்டத்தின் எல்லைக்கோடு வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளது’

 • 2

  இரண்டு பிரிவுகள், போக்குகள், நடைமுறைகள் போன்றவற்றை வேறுபடுத்திக் காட்டும் கூறு.

  ‘அராஜகவாதத்திற்கும் சந்தர்ப்பவாதத்திற்கும் இடையிலுள்ள எல்லைக்கோட்டைத் தெரிந்துகொள்ள வேண்டும்’
  ‘குச்சுப்புடி நடனத்தையும் பரதநாட்டியத்தையும் பாகுபடுத்திக் காட்டும் எல்லைக்கோடு மிகவும் மெல்லியது’
  ‘உங்களுக்குப் பழக்கமான சங்கீத எல்லைக்கோடுகளை மறந்துவிட்டு நான் அளிக்கும் சங்கீத உருவத்தைக் கவனியுங்கள்’

 • 3

  (கிரிக்கெட் விளையாட்டில்) ஆடப்படும் மைதானத்தின் வெளிக்கோடு.

  ‘அவர் மைதானத்தின் நான்கு திசைகளிலும் பந்துகளை எல்லைக்கோட்டுக்கு விரட்டினார்’