தமிழ் எலும்பை எண்ணு யின் அர்த்தம்

எலும்பை எண்ணு

வினைச்சொல்எண்ண, எண்ணி

  • 1

    (ஒருவரை) கடுமையாக அடித்து நொறுக்குதல்.

    ‘நீ அவன் தங்கையைக் காதலிப்பது தெரிந்தால் அவன் உன் எலும்பை எண்ணிவிடுவான்’
    ‘யாரிடம் பேசுகிறாய் என்று தெரிந்துகொண்டு பேசு. இல்லாவிட்டால் உன் எலும்பை எண்ணிவிடுவேன்’