தமிழ் எள்ளி நகையாடு யின் அர்த்தம்

எள்ளி நகையாடு

வினைச்சொல்நகையாட, நகையாடி

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (அவமானம் அடையும்படி ஒருவரை) கேலிசெய்தல்.

    ‘குடும்பமே கூடி நின்று என்னை எள்ளி நகையாடிய காட்சியை மறக்க முடியவில்லை’

  • 2

    உயர் வழக்கு சிரிப்புக்கு உரிய விஷயமாக விமர்சித்தல்.

    ‘அவர் வெளியிட்ட கருத்துகள் எதிர்க்கட்சி ஏடுகளால் எள்ளி நகையாடப்பட்டன’