தமிழ் எளிது யின் அர்த்தம்

எளிது

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  கஷ்டம் அல்லது சிக்கல் இல்லாதது; சுலபம்; லேசு.

  ‘இப்படிச் செய்திருக்கலாமே என்று சொல்வது எளிது’
  ‘சிலருக்குச் சில கைத்தொழில்கள் எளிதில் கைவராது’
  ‘இவ்வளவு எளிதான தீர்வு எனக்குத் தோன்றவில்லையே!’
  ‘அனைவரும் எளிதில் காணக்கூடிய இடத்தில் அறிக்கையை ஒட்டு!’
  ‘காட்டை எளிதாக அடைந்து விட்டோம். ஆனால் புலியைத்தான் பார்க்க முடியவில்லை’