தமிழ் எளிமை யின் அர்த்தம்

எளிமை

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  சிக்கல் அற்ற தன்மை; தெளிவு.

  ‘கவிதைக்கு வேண்டியது எளிமையா?’
  ‘சிக்கலான விஷயத்தையும் அவரால் எளிமையாக எழுத முடியும்’

 • 2

  (வீண்) ஆடம்பரம் இல்லாத தன்மை.

  ‘எளிமையான அலங்காரத்தோடு அவள் புறப்பட்டாள்’
  ‘அவர் அமைதியானவர், எளிமையானவர்’