எளிய -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

எளிய1எளிய2எளிய3

எளிய1

பெயரடை

 • 1

  சிக்கல் அற்ற; தெளிவான; கஷ்டம் இல்லாத.

  ‘மொழியை எளிய முறையில் கற்பதற்கு இந்த நூல் உதவும்’
  ‘இந்த எளிய விதியைப் பயன்படுத்தி எந்தச் சிக்கலான கணக்கையும் போட முடியும்’
  ‘இந்த எளிய உதவியைக்கூட உன்னால் செய்ய முடியாதா?’

எளிய -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

எளிய1எளிய2எளிய3

எளிய2

பெயரடை

 • 1

  பண வசதி குறைந்த; ஏழ்மையான.

  ‘எளிய குடும்பத்தில் பிறந்து முன்னேறியவர்’
  ‘எளிய மக்களின் நலனுக்கான திட்டம்’

 • 2

  விலை அதிகம் இல்லாத; மலிவான.

  ‘வீட்டில் எளிய அலுமினியப் பாத்திரங்கள் மட்டுமே இருந்தன’

 • 3

  பகட்டு அற்ற; ஆடம்பரம் இல்லாத.

  ‘அவரிடம் நிறைய பணம் இருக்கிறது; இருந்தாலும் எளிய வாழ்க்கை வாழ்கிறார்’

எளிய -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

எளிய1எளிய2எளிய3

எளிய3

பெயரடை

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு கீழ்த்தரமான; மட்டமான.

  ‘அவருடைய செயல்களெல்லாம் எளிய செயல்களாகத்தான் இருக்கின்றன’
  ‘உனக்கு ஏன் இப்படி ஒரு எளிய புத்தி?’
  ‘இப்படி எளிய செயல்களைச் செய்துகொண்டு எப்படித்தான் ஊரில் திரிகிறாரோ?’