தமிழ் எழுச்சி யின் அர்த்தம்
எழுச்சி
பெயர்ச்சொல்
உயர் வழக்கு- 1
உயர் வழக்கு (குன்றிய நிலையிலிருந்து அல்லது வீழ்ச்சிக்குப் பின்) புதிய வேகத்துடன் கூடிய வளர்ச்சி; மறுமலர்ச்சி.
‘வீழ்ந்துபட்ட இந்த இனம் மீண்டும் எழுச்சி பெறும்’‘சிந்தனையாளர்கள்தான் உண்மையான சமூக எழுச்சிக்குக் காரணமாக இருக்கிறார்கள்’ - 2
உயர் வழக்கு (உணர்ச்சி நிரம்பிய) போராட்டம்; கிளர்ச்சி.
‘விடுதலைப் போராட்டம் என்னும் மாபெரும் எழுச்சியில் கலந்துகொண்டு இன்னல் அனுபவித்தவர்கள் இவர்கள்’ - 3
உயர் வழக்கு (வேகத்துடன் வெளிப்படும்) உற்சாகம்.
‘தாயகம் திரும்பிய தலைவருக்கு எழுச்சி மிகுந்த வரவேற்பு அளிக்கப்பட்டது’