தமிழ் எழுந்திரு யின் அர்த்தம்

எழுந்திரு

வினைச்சொல்எழுந்திருக்க, எழுந்திருந்து

 • 1

  நிற்கும் நிலைக்கு வருதல்; எழுதல்.

  ‘மெதுவாகக் கையை ஊன்றி எழுந்திரு!’
  ‘இங்கே உட்காரக் கூடாது, எழுந்திரு!’
  உரு வழக்கு ‘எழுந்திருக்க முடியாதபடி கடன் சுமை’

 • 2

  (தூக்கத்திலிருந்து) விழித்தல்.

  ‘அவர் காலையில் எட்டு மணிக்குத்தான் எழுந்திருப்பார்’