தமிழ் எழுப்பு யின் அர்த்தம்
எழுப்பு
வினைச்சொல்
- 1
(உண்டாக்குதல் தொடர்பான வழக்கு)
- 1.1 (கோட்டை, நினைவுச் சின்னம் முதலியன) உருவாக்குதல்; கட்டுதல் ‘நடுவில் சுவர் எழுப்பி அறையைப் பிரித்தார்கள்’‘மறைந்த தலைவருக்கு இங்கே ஒரு நினைவுச் சின்னம் எழுப்பப்படும்’
- 1.2 (ஓசை, இசை முதலியவற்றை) உண்டாக்குதல் ‘நாகசுரம் மங்கல இசை எழுப்பியது’‘பறவைகள் எழுப்பிய இனிய ஓசை’
- 1.3 (கேள்வி, பிரச்சினை முதலியவற்றை) கவனத்துக்குக் கொண்டுவருதல் ‘இது இரங்கல் கூட்டம். விவாதத்துக்கு உரிய பிரச்சினைகளை எழுப்பாதீர்கள்’
- 1.1 (கோட்டை, நினைவுச் சின்னம் முதலியன) உருவாக்குதல்; கட்டுதல்
- 2
(நிலைமாற்றுதல் தொடர்பான வழக்கு)
- 2.1 (உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து) எழச்செய்தல்; கிளப்புதல் ‘கொஞ்ச நேரம்கூட உட்காரவிடவில்லை, எழுப்பிக் கூட்டிக்கொண்டு போய்விட்டான்’
- 2.2 தூக்கத்திலிருந்து விழிக்கச்செய்தல் ‘தூங்குகிற குழந்தையை எழுப்பிப் பால் கொடுக்க வேண்டுமா?’
- 2.3கிறித்தவ வழக்கு
(இறந்தவரை) உயிர் பெறச்செய்தல்‘மரித்தவரையும் எழுப்ப வல்லவரின் மகிமையைச் சொல்கிறேன்’
- 2.1 (உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து) எழச்செய்தல்; கிளப்புதல்