தமிழ் எழும்பு யின் அர்த்தம்

எழும்பு

வினைச்சொல்எழும்ப, எழும்பி

 • 1

  (இருக்கும் மட்டத்திலிருந்து விசையின் காரணமாக உயரே) எழுதல்.

  ‘சுனாமி காரணமாக ராட்சச அலைகள் கடலில் எழும்பின’
  ‘வீசப்பட்ட பந்து எழும்பும் உயரத்தைத் தீர்மானமாகக் கூறமுடியுமா?’

 • 2

  (இயல்பான நிலையிலிருந்து) உயர்ந்திருத்தல்.

  ‘தலையை வாராததால் அவன் முடி எழும்பிநின்றது’

 • 3

  (ஒலி) தோன்றுதல்.

  ‘இரு ஆட்டுக் கிடாக்களின் மண்டைகளும் மோதி ‘மடார்’ என்ற ஓசை எழும்பியது’
  ‘ஜுரத்தின் காரணமாக அவன் குரலே எழும்பவில்லை’

 • 4

  (நரை) தோன்றுதல்.

  ‘காதோரத்தில் நரை எழும்பி விட்டது’