தமிழ் எவ்வளவு யின் அர்த்தம்

எவ்வளவு

பெயர்ச்சொல்

 • 1

  எந்த அளவு.

  ‘இன்னும் எவ்வளவு தூரம் போக வேண்டும்?’
  ‘ஒரு மைல் நடப்பதற்கு எவ்வளவு நேரம் ஆயிற்று?’

 • 2

  (பணம், விலை தொடர்பாக) என்ன தொகை.

  ‘இந்த மாட்டுக்கு எவ்வளவு கொடுத்தாய்?’
  ‘கத்திரிக்காய் கால் கிலோ எவ்வளவு?’

 • 3

  (அடையாக வரும்போது) அளவின், தன்மையின் மிகுதியை அழுத்திக் கூறும் பிரதிப்பெயர்.

  ‘எவ்வளவு நல்ல பையன்!’
  ‘எவ்வளவு வேகமாக ஓடுகிறான்!’