தமிழ் ஏக்கம் யின் அர்த்தம்

ஏக்கம்

பெயர்ச்சொல்

  • 1

    இழந்ததை அல்லது கிடைக்காததை எண்ணுவதால் ஏற்படும் வருத்த உணர்வு.

    ‘அதிகாரத்தோடும் ஆடம்பரத்தோடும் நடத்திய வாழ்க்கையை எண்ணியபோது ஏக்கப் பெருமூச்சு வெளிப்பட்டது’
    ‘வேலை கிடைக்கவில்லையே என்ற ஏக்கத்தால் அவன் மனம் உடைந்துபோயிருக்கிறான்’
    ‘அன்பை எதிர்பார்த்துக் கிடைக்காத ஏக்கம்’