தமிழ் ஏடு யின் அர்த்தம்

ஏடு

பெயர்ச்சொல்

 • 1

  (பொதுவாக) பத்திரிகை; (குறிப்பாக) இதழ்.

  ‘பொது நூலகங்கள் கட்சி ஏடுகளை வாங்குவதில்லை’
  ‘இது ஒரு தரமான இலக்கிய ஏடு’
  ‘நாளேடுகளும் வார ஏடுகளும் பெருகிவிட்டன’

 • 2

  (பத்திரிகை, புத்தகம் முதலியவற்றின்) தாள்.

  ‘அகராதி ஏடுஏடாக வந்துவிட்டது’

 • 3

  சுவடிக் கட்டு அல்லது அந்தக் கட்டில் ஓர் ஓலை.

  ‘பழைய ஏடுகளைப் பரிசோதித்து அவர் இந்த நூலைப் பதிப்பித்தார்’
  ‘ஏடும் எழுத்தாணியும் அநேகமாக மறைந்துவிட்டன’

 • 4

  (பேச்சுக்கு எதிர்மறையாக வரும்போது) எழுத்து; (நடைமுறைக்கு எதிர்மறையாக வரும்போது) எழுதப்பட்டது; நூலில் இடம்பெற்றுள்ளது.

  ‘இது பேச்சு வழக்கில் இல்லை; ஏட்டு வழக்கில் மட்டுமே உள்ளது’
  ‘இது ஏட்டில் எழுதாச் சட்டம்’
  ‘இந்தத் திட்டங்கள் எல்லாம் ஏட்டளவிலேயே உள்ளன’

 • 5

  ஒரு செய்திக்கு ஆதாரமாகும் எழுத்துப் பத்திரம்.

  ‘தினமும் காவல்நிலையத்திற்குச் சென்று ஏட்டில் கையெழுத்திட்டு வர வேண்டும் என்ற நிபந்தனையுடன் வெளியே வந்திருக்கிறார்’

 • 6

  (பால்) ஆடை.

  ‘பாலில் ஏடு படியப்படிய அதை எடுத்துப் பாசந்தி செய்யலாம்’

 • 7

  வட்டார வழக்கு வாழை இலையின் நரம்பை நீளவாக்கில் கிழிப்பதால் பெறும் இலை.

  ‘குழந்தைக்குப் பெரிய இலை வேண்டாம்; ஒரு ஏடு போடு’