தமிழ் ஏணி யின் அர்த்தம்

ஏணி

பெயர்ச்சொல்

 • 1

  உயரமான ஓர் இடத்தை அடைவதற்கு வசதியாக இரு நீண்ட மர அல்லது இரும்புக் கழிகளுக்கு இடையில் குறுக்குச் சட்டங்களைப் படிகளாக வைத்துச் செய்யப்பட்ட ஒரு சாதனம்.

  ‘நான் கீழே வரும்வரை ஏணியை ஜாக்கிரதையாகப் பிடித்துக்கொள்’
  ‘மூங்கில் ஏணி’
  உரு வழக்கு ‘ஏறி வந்த ஏணியை உதறித்தள்ளும் குணம்’
  உரு வழக்கு ‘புகழேணி’