ஏது -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

ஏது1ஏது2ஏது3

ஏது1

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (ஒரு செயல் அல்லது நிகழ்ச்சி எளிதில் நடப்பதற்கான) வசதி.

  ‘தேர்தலில் அனைவரும் சிரமமின்றி வாக்களிக்க ஏதுவாக வாக்குச் சாவடி ஊரின் மையத்தில் இருந்தது’
  ‘மாணவர்கள் அமைதியாகப் படிக்க ஏதுவான ஒரு சூழ்நிலை பள்ளியில் இருக்க வேண்டும்’

 • 2

  (ஒன்றுக்கு) காரணம்.

  ‘தவறு நிகழ்வதற்கு ஏது இல்லாத வகையில் போடப்பட்ட திட்டம் இது’

ஏது -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

ஏது1ஏது2ஏது3

ஏது2

பிரதிப்பெயர்

 • 1

  ‘குறிப்பிடப்படுவது இல்லை’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் பிரதிப் பெயர்.

  ‘நீ சொல்கிற கோயில் அங்கே ஏது?’
  ‘இவ்வளவு பொருள்களையும் வைக்க வீட்டில் ஏது இடம்?’
  ‘அவனுக்கு ஏது அந்தத் தைரியம்?’

 • 2

  எப்படி அல்லது எங்கிருந்து (வந்தது).

  ‘உனக்கு இவ்வளவு பணம் ஏது?’

ஏது -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

ஏது1ஏது2ஏது3

ஏது3

இடைச்சொல்

 • 1

  ஒரு அனுமானத்தைக் கேலியாக வெளிப்படுத்தும்போது வாக்கியத்தின் தொடக்கத்தில் பயன்படுத்தும் இடைச்சொல்.

  ‘ஏது, போகிற போக்கைப் பார்த்தால் அவரே தொழில் தொடங்கிவிடுவார் போலிருக்கிறதே!’
  ‘ஏது, இன்னும் கொஞ்ச நேரம் போனால் நான்தான் இந்த வீட்டுக்குச் சொந்தக்காரன் என்று சொல்லிவிடுவாய் போலிருக்கிறதே?’