தமிழ் ஏதோ யின் அர்த்தம்

ஏதோ

இடைச்சொல்

 • 1

  ஒருவர் அல்லது ஒன்றின் நிலை, செயல், தன்மை போன்றவற்றைக் குறிப்பிடும் ஒரு வாக்கியத்தை, அவற்றுக்கு மாறானவற்றைக் குறிப்பிடும் மற்றொரு வாக்கியத்துடன் தொடர்புபடுத்தப் பயன்படும் இடைச்சொல்.

  ‘யாருக்கும் உதவி செய்யாதவர், ஏதோ இவ்வளவு பணமாவது உனக்குக் கொடுத்தாரே!’
  ‘பத்து வருடமாக அவரோடு தொடர்பு கிடையாது. ஏதோ என்னைப் பற்றி உன்னிடம் விசாரித்தாரே’

 • 2

  ஒன்றைக் குறித்து மனநிறைவு இல்லாத சூழலில் பயன்படுத்தும் இடைச்சொல்.

  ‘‘பரீட்சை எப்படி எழுதியிருக்கிறாய்?’ ‘ஏதோ எழுதியிருக்கிறேன்.’’
  ‘‘எப்படி இருக்கிறீர்கள்?’ என்று நண்பரிடம் கேட்டதற்கு ‘ஏதோ காலம் ஓடிக்கொண்டிருக்கிறது’ என்று சொன்னார்’