தமிழ் ஏன் யின் அர்த்தம்

ஏன்

பிரதிப்பெயர்

 • 1

  காரணத்தை அல்லது பயனைக் குறித்து வினவும் பிரதிப்பெயர்; என்ன (காரணத்திற்காக அல்லது பயன் கருதி); எதற்கு.

  ‘ஏன் இதைச் செய்தாய்?’
  ‘ஏன்? இதை நான் சொல்லக்கூடாதா?’
  ‘‘குப்குப்’ என்று புகை வருவது ஏன்?’

தமிழ் ஏன் யின் அர்த்தம்

ஏன்

இடைச்சொல்

 • 1

  ஒரு பொதுக் கூற்றையும் அதற்கு எதுவும் விலக்கு இல்லை என்று கூறும் மற்றொரு கூற்றையும் தொடர்புபடுத்தும் இடைச்சொல்.

  ‘வளரும் நாடுகளில் பல உலக வங்கிக்குப் பெரும் அளவில் கடன்பட்டிருக்கின்றன. ஏன், இந்தியாவும்கூடத்தான்’
  ‘குடும்பங்களில் நிம்மதி என்பது அறவே போய்விட்டது. ஏன், நம் குடும்பத்தையே எடுத்துக்கொள்ளுங்கள்’