தமிழ் ஏனென்றால் யின் அர்த்தம்

ஏனென்றால்

இடைச்சொல்

  • 1

    ஒன்றுக்கு உரிய காரணத்தை அல்லது விளக்கத்தைத் தெரிவிப்பதற்கு இரண்டு வாக்கியங்களைத் தொடர்புபடுத்தும் இடைச்சொல்.

    ‘இன்று கச்சேரி நடைபெறாது. ஏனென்றால் பாடகருக்குத் தொண்டை கட்டியிருக்கிறது’
    ‘‘உன் குழந்தைகள் பயப்படுவதே இல்லை, ஏன்?’ ‘ஏனென்றால் நான் அவர்களைப் பயமுறுத்துவதே இல்லை.’’