தமிழ் ஏமாற்று யின் அர்த்தம்

ஏமாற்று

வினைச்சொல்ஏமாற்ற, ஏமாற்றி

 • 1

  (நேர்மையற்ற முறையில் நடந்து அல்லது பொய் சொல்லி ஒருவரை) மோசம்செய்தல்.

  ‘வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஐயாயிரம் ரூபாய் பெற்றுக்கொண்டு பலரை ஏமாற்றியவன் பிடிபட்டான்’
  ‘அவன் உன்னை ஏமாற்றிவிட்டான் என்று சொல்லாதே. நீ ஏமாந்துவிட்டாய் என்று சொல்!’

 • 2

  (ஒரு நல்ல நோக்கத்துக்கு அல்லது வேடிக்கைக்காக) தந்திரம்செய்தல்.

  ‘குழந்தையை ஏமாற்றித்தான் மருந்து சாப்பிட வைத்தேன்’
  ‘ஆசிரியர் வருகிறார் என்று சொல்லி நம்மை எப்படி ஏமாற்றிவிட்டான்!’

 • 3

  நம்பிக்கை அல்லது எதிர்பார்ப்பைப் பொய்யாக்கும் விதத்தில் நடந்துகொள்ளுதல்.

  ‘உன்னை நம்பி கல்யாணத்துக்கு நாள் குறித்து விட்டேன். என்னை ஏமாற்றிவிடாதே’

தமிழ் ஏமாற்று யின் அர்த்தம்

ஏமாற்று

பெயர்ச்சொல்

 • 1

  ஏமாற்றும் செயல்.

  ‘நமது சமூகத்திலுள்ள ஏமாற்றுப் பேர்வழிகளை நாம் இனங்கண்டுகொள்ள வேண்டும்’
  ‘இரு நாடுகளுக்கு இடையேயான இந்த உடன்பாடு ஒரு ஏமாற்று வேலைதான் என்று சில அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்’
  ‘ஆளும் வர்க்கத்தின் சூழ்ச்சிக்கும் ஏமாற்றுக்கும் நாம் அடிபணிந்து விடக்கூடாது என்றார் அவர்’