தமிழ் ஏறக்குறைய யின் அர்த்தம்

ஏறக்குறைய

வினையடை

 • 1

  சற்றுக் கூடுதலாக அல்லது குறைவாக; தோராயமாக.

  ‘களவுபோன பொருட்களின் மதிப்பு ஏறக்குறைய ஒரு லட்சம் ரூபாய்’
  ‘அவனுக்கு ஏறக்குறைய முப்பது வயது இருக்கும்’

 • 2

  பெரும்பாலும்; அநேகமாக.

  ‘கூட்டத்தில் ஏறக்குறைய எல்லா உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்’
  ‘ஏறக்குறைய நீ சொன்னது போலத்தான் நடந்தது’