தமிழ் ஏற்படுத்து யின் அர்த்தம்

ஏற்படுத்து

வினைச்சொல்ஏற்படுத்த, ஏற்படுத்தி

 • 1

  (குறிப்பிட்ட நிலை, உணர்ச்சி, விளைவு போன்றவற்றை) உண்டாக்குதல்.

  ‘புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது’
  ‘கண்ணாடிச் சில்லு காலில் குத்திக் காயத்தை ஏற்படுத்திவிட்டது’
  ‘திரைப்படம்மூலம் மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்திய பழம்பெரும் நடிகர் இவர்’
  ‘இருநாடுகளும் சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக்கொண்டன’
  ‘அவனது நிலைமை எனக்குப் பரிதாபத்தை ஏற்படுத்தியது’
  ‘அவருடைய பேச்சு எனக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது’

 • 2

  (அமைப்பு, கட்டடம், திட்டம் போன்றவற்றை) உருவாக்குதல்; நிறுவுதல்.

  ‘தொழிலாளர்களின் நன்மை கருதியே தொழிற்சங்கங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன’
  ‘இந்த மாவட்டத்தில் சில தொழிற்சாலைகளை ஏற்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது’
  ‘ஆண்டுக்கு ஒரு கோடி பேருக்கு வேலை வழங்கும் திட்டம் ஏற்படுத்தப்பட்டது’
  ‘மறைந்த எழுத்தாளரின் குடும்பத்திற்காக ஏற்படுத்தப்பட்ட நிதி’

 • 3

  (வசதி, தொடர்பு போன்றவற்றை) உருவாக்குதல்.

  ‘எனக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக்கொண்டேன்’
  ‘இளைஞராக இருக்கும்போதே இவர் புரட்சியாளர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டார்’