தமிழ் ஏற்பாடு யின் அர்த்தம்

ஏற்பாடு

பெயர்ச்சொல்

 • 1

  செயல், நிகழ்ச்சி முதலியவை நடைபெறுவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கை; வழி.

  ‘திருமணத்துக்கான ஏற்பாடுகள் நடந்துவருகின்றன’
  ‘வெளிநாடு செல்வதற்கான எல்லா ஏற்பாடுகளையும் முடித்துவிட்டேன்’
  ‘பலத்த மழையினால் வீடு இழந்தவர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதாக அமைச்சர் உறுதி அளித்தார்’
  ‘பறிபோன பணத்துக்கு வேறு வகையில் ஏற்பாடு செய்தாக வேண்டும்’

 • 2

  (குறிப்பிட்ட முறையில் உருவாக்கப்பட்ட அல்லது திட்டமிட்ட) அமைப்பு.

  ‘வெளியிலிருந்து இழுத்துச் சாத்தினாலே பூட்டிக்கொள்ளும் ஏற்பாடுள்ள கதவு’