தமிழ் ஏற்றம் யின் அர்த்தம்

ஏற்றம்

பெயர்ச்சொல்

 • 1

  (விலை) அதிகரிப்பு.

  ‘விலைவாசி ஏற்றத்தைக் கட்டுப்படுத்தக் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நிதியமைச்சர் உறுதியளித்தார்’

 • 2

  (சாலையில்) உயர்ந்து செல்லும் இடம்; மேடான இடம்.

  ‘இந்த ஏற்றத்தில் வண்டி போவது கடினம்’

 • 3

  உயர் வழக்கு மேன்மை; சிறப்பு.

  ‘அயராத உழைப்பினால்தான் அவர் இன்று வாழ்வில் ஏற்றத்தை அடைந்துள்ளார்’
  ‘நல்ல மொழிபெயர்ப்புகள் மொழிக்கு வளமும் ஏற்றமும் தருகின்றன’

தமிழ் ஏற்றம் யின் அர்த்தம்

ஏற்றம்

பெயர்ச்சொல்

 • 1

  கிணறு போன்ற நீர்நிலைகளின் விளிம்பில் நடப்பட்ட மரம் ஒன்றின் உச்சியில் ஒரு நீளமான கழியைக் குறுக்காகப் பொருத்தி அதன் ஒரு முனையில் சால் ஒன்றையும், மறுமுனையில் அதற்கேற்ற பாரத்தையும் கட்டி, இலகுவாக நீர் இறைக்கப் பயன்படுத்தும் ஓர் அமைப்பு.

தமிழ் ஏற்றம் யின் அர்த்தம்

ஏற்றம்

பெயர்ச்சொல்

வேதியியல்
 • 1

  வேதியியல்
  குறிப்பிட்ட வேதிப் பொருளை மற்றொரு வேதிப்பொருளோடு சேர்க்கும் செயல்.

  ‘ஆக்சிஜனேற்றம்’
  ‘ஹைட்ரஜனேற்றம்’